காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து அத்துமீறியத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முதல் ராஜோரி பகுதியில் மக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதில் தாக்குதலையும் நடத்தி வருகின்றது.
இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரி ஒருவர் உட்பட நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் பாகிஸ்தான் இராணுவம் எல்லை தாண்டிய அத்துமீறிய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதனால் குறித்த பகுதியில் உள்ள 84 பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தற்போது எல்லைப்பகுதியில் பதற்றநிலை அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் இரு தரப்பு மோதல் நிலையும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதமும் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறிய தாக்குதலை மேற்கொண்டதால் ஜம்மு, சம்பா, கதுரா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 15 நாட்கள் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.