Wednesday, February 7, 2018

How Lanka

விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி காயம்

ராஜஸ்தான் மாநிலத்தில் புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவருடன் சென்ற உறவினர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோட்டாவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விட்டு, சித்தோர்கருக்கு யசோதா பென் காரில் புதன்கிழமை சென்றார். யசோதா பென்னுடன் அவரது உறவுப் பெண் வசந்த் பாய் மோடி (67), பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உள்ளிட்ட 4 பேரும் சென்றனர்.

பர்சோலி காவல்நிலைய எல்கைக்கு உள்பட்ட பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

முன்னால் சென்ற லாரியில் இருந்த ஓட்டுநர் திடீரென பிரேக்கை அழுத்தியதால், அதன் மீது கார் மோதியதாக தெரிகிறது.


இந்த விபத்தில் காரில் இருந்த யசோதா பென்னுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருடன் காரில் வந்த வசந்த் பாய் மோடி உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனர்.

இதையடுத்து, 4 பேரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், வசந்த் பாய் மோடி சிகிச்சை பலனின்றி பலியானார்.

எஞ்சிய 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பர்சோலி காவல்நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.