Thursday, February 22, 2018

How Lanka

மணீஷ் பாண்டேவை திட்டிய டோனி

இந்திய அணியின் மிஸ்டர் கூல் என்றழைக்கப்படும் டோனி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியின் போது மணீஷ் பாண்டேவை திட்டியது போன்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.

எப்போதும் கோபத்தை வெளிப்படுத்தாமல், கூலாக விளையாடும் டோனி ஏன் இப்படி கத்தினார் என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியமுடன் இந்த வீடியோவை பார்த்தனர்.

இந்நிலையில் டோனி அப்போது பேசியது என்ன என்பது குறித்து தற்போது வெளியாகியுள்ளது. இதில் இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியதாக உள்ளது.

டோனி ஓட்டங்கள் எடுப்பதில் கை தேர்ந்தவர். இந்திய அணியில் டோனிக்கு இணையாக ஓட்டம் எடுப்பவர் என்றால் கோஹ்லியை தவிர வேறு யாரும் இல்லை.


ஒரு ஓட்டத்தை இரண்டாகவும், இரண்டு ஓட்டத்தை மூன்றாகவும் எடுக்கக் கூடிய டோனியிடம் பாண்டே இப்படி செய்தால் கோபப்படாமல் என்ன செய்வார். அதாவது நேற்றைய போட்டியின் போது பந்தை அடித்த பாண்டே, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து ஓட்டம் எடுப்பதில் கவனம் இல்லாமல் இருந்தார். இதனால் டோனி கோபமாகியுள்ளார். அதுமட்டுமின்றி எந்த ஒரு துடுப்பாட்ட வீரரும் தான் விளையாட வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

20-வது ஓவரில் முதல் பந்தை பாண்டே சந்திக்கிறார். அவர் அடித்து விட்டு ஓடுகிறார். மறு முனையில் உள்ள டோனி இரண்டாவது ஓட்டம் எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் பாண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார். ஒரு வேளை இரண்டு ஓட்டங்கள் ஓடினால் மீண்டும் பாண்டேதான் துடுப்பெடுத்தாடுவார். இதிலிருந்து டோனி அணிக்கு ஓட்டம் தான் தேவை, என்பதில் முக்கியமாக உள்ளார் என்று தெரிகிறது.

அதுவும் ஒரு வகையில் நல்லது என்றே கூற வேண்டும். ஏனெனில் அப்படி டோனி கோபப்பட்டதால் தான் 19.1 ஓவரில் 171 ஓட்டம் எடுத்திருந்த இந்திய அணி, இறுதியில் 188 ஓட்டங்கள் எடுத்தது. அந்த ஓவரில் டோனி 17 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது, இதில் இந்திய வீரர்கள் டோனி, மனிஷ் பாண்டே ஜோடி போட்டு ஆடினார்கள்.

டோனி 28 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மனிஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார்.

இந்நிலையில் களத்தில் கூல் கேப்டன் என அழைக்கப்படும் டோனி முதல் முறையாக கோபப்பட்டுள்ளார்.

அதாவது, மனிஷ் பாண்டேவை அவர் ஹிந்தியில் மோசமாக திட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் டோனி பேசியது பாதி கேட்கவில்லை, மீதியை வைத்து அவர் மனிஷ் பண்டேவிடம், அங்கே என்ன பார்த்துட்டு இருக்க? இங்க பாரு? கவனமா இரு என்று கடைசி நேரத்தில் பேசியுள்ளார்.

போட்டிக்கு பின்னர் இது குறித்து பேசிய பாண்டே, களத்தில் டோனி திட்டிய முதல் வீரர் நான் தான், இதை விட பெருமை எனக்கு வேறன்ன இருக்க முடியும் என கூறியுள்ளார்.