Tuesday, February 27, 2018

How Lanka

பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் சடுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மேலதிக நீரை வெளியேற்ற 08 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும்மழை கொட்டியுள்ளது.

இதன் காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் சடுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைக்கு சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீர் நிரம்பியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பராக்கிரம சமுத்திரத்தில் வழமையை விட அதிகளவில் நீர் நிரம்பியுள்ள நிலையில் மேலதிக நீரை வௌியேற்ற எட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆறு வான் கதவுகள் ஊடாக ஒரு அடி நீரும் இரண்டு வான் கதவுகள் ஊடாக இரண்டு அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும், செக்கன் ஒன்றுக்கு சுமார் 1400 கன அடி நீர் குளத்தில் இருந்து வௌியேறுவதாகவும், அவ்வாறு வெளியேறும் நீர் மகாவலி கங்கைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் அதன் அயற்புறங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.