தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் அபார பந்துவீச்சு காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவரில் 118 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த அணித்தலைவர் கோஹ்லி- தவான் ஜோடி தன் அபார ஆட்டத்தால் 20.3-ஆவது ஓவரில் 119 ஓட்டங்கள் அடித்து வெற்றிக் கனியை தட்டிப் பறித்தனர்.
முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. என்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன.
ரபாடாவுக்கு திருப்பி கொடுத்த கோஹ்லி
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரபாடாவின் பந்து வீச்சில் கோஹ்லி அடி வாங்கியதும், அதற்கு அடுத்த பந்திலே கோஹ்லி அவருக்கு திருப்பி கொடுத்ததும் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி 46 ஓட்டங்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு பெரிது உதவினார்.
இந்நிலையில் இந்த போட்டியின் 8-வது ஓவரை தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா வீசினார்.
அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட இந்திய அணியின் தலைவர் கோஹ்லி அதை திருப்பி அடிக்க முயன்ற போது, அந்த பந்து எதிர்பாராத விதமாக அவரது பேட்டில் படாமல் அவரது நெஞ்சு பகுதியில் பலமாக பட்டது.
இதனால் நிலைகுலைந்த கோஹ்லி வலி தாங்க முடியாமல் சிறிது நேரம் நின்றுவிட்டார்.
ஆனால் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதற்கு அடுத்த பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி அசத்தியுள்ளார் கோஹ்லி