Saturday, March 3, 2018

How Lanka

வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் அடுத்த 6 மாதங்களில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டம் - ஜனாதிபதி மைத்திரிபால


வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் அடுத்த 6 மாதங்களில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இதன்போது 200 பட்டதாரிகளுக்கும் 42 டிப்ளொமாதாரிகளுக்கும் ஜனாதிபதியினால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.