அரச பாடசாலைகளில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தென்னங்கன்றுகளுக்கு 50 ரூபா அறவிடப்படும் என தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருகோணமலை தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு வரை தரம் 6 இல் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் 2 பொதியிடப்பட்ட தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
ஆனால் இவ்வாண்டு பொதியிடப்பட்ட ஒரு தென்னங்கன்று வழங்கப்படும் இதற்கு 50 ரூபா அறவிடப்படும்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் பாடசாலைகள் மாணவர்களின் பெயர் விபரங்களை பிராந்திய முகாமையாளர், பிராந்திய காரியாலயம், தென்னைப் பயிர்ச்செய்கை சபை, கும்புறுப்பிட்டி, திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அதிபர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.