Saturday, March 17, 2018

How Lanka

அச்சுவேலியில் அக்ஸிடன்ட்(Accident) - இருவர் பலி

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்றிரவு 8.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளொன்றும் டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் அச்சுவேலி பத்தைமேனியைச் சேர்ந்த 35 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.