Thursday, March 1, 2018

How Lanka

அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி - பெண் அதிபர் மரணம் - அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

பெண் அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கல்வி அமைச்சின் 11 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் இரண்டு பேர் உட்பட 11 அதிகாரிகளுக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில், கல்வி அமைச்சின் அதிகாரிகள் இரண்டு பேர் பதவி நீக்கம் செய்யவும் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் மனித வளங்கள் தொடர்பான பிரிவின் பணிப்பாளரான பெண் அதிகாரி மற்றும் பிரதிப் பணிப்பாளர் ஆகியோரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின்போது, ஹம்பாந்தோட்டை சுவி தேசிய பாடசாலையின் பெண் அதிபர் கடந்த மாதம் 17ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

தலைமைத்துவ பயிற்சியின் போது குறித்த பெண் அதிபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குருநாகல் வாரியபொல பகுதியில் இடம்பெற்றிருந்தது.

ஹம்பாந்தோட்டை சியம்பலாகஸ்லெவ பிரதேசத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான ரோஹினி குமாரி அத்தபத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.