கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரான காத்தான்குடியிலும் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஹர்த்தாலுக்கான அழைப்பு இரவோடிரவாக விடுக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி பிரதான வீதியில் டயரைப் போட்டு எரித்த நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதேவேளை காத்தான்குடி நகரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட போதும் அரச அலுவலங்கள், பாடசாலைகள், உள்ளூர் மற்றும் தூர இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் என்பன வழமை போல் இயங்கின.
பிரதேசத்தில் வன்முறைகள் ஏதும் நிகழாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.