இலங்கையில் நடக்கும் கலவரங்கள் வருத்தம் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட் செய்து இருக்கிறார்.
இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 10 நாள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கட்டிடங்கள், மசூதிகள், புத்த மத விகாரங்கள் இடிக்கப்பட்டு இருக்கிறது. பல வீடுகளை கலவரக்காரர்கள் கொளுத்தி இருக்கிறார்கள்.
இதில் 2 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அங்கு தற்போது இராணுவம் இறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் போராட்டம் நடக்கிறது.
இந்த நிலையில் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.
இது குறித்து இந்திய வீரர் அஸ்வின் டிவிட்டரில்
''இலங்கையில் மிகவும் வருந்தத்தக்க விஷயங்கள் நடக்கிறது. இலங்கை மிகவும் நல்ல நாடு, அங்கு மிகவும் நல்ல மக்கள் இருக்கிறார்கள். அங்கு நடக்கும் இந்த பிரிவினை பிரச்சினை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். வாழ்வோம், வாழ விடுவோம். வேற்றுமைகளை புரிந்து கொண்டு கடந்து செல்வோம். நல்ல நிலை திருப்ப வேண்டிக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.