Monday, March 26, 2018

How Lanka

கிளிநொச்சியில் விழுந்து கிடக்கும் நீர்தாங்கியை அகற்றும் நடவெடிக்கை ஆரம்பம்

கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் இருந்து நீர்த்தாங்கி ஒன்று 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியும் இறுதி யுத்தத்தின்போது வீழ்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நீர்த்தாங்கி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்த ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த நீர்த்தாங்கி தற்போது அகற்றப்பட்டு வருகின்றது.

அத்துடன் குறித்த நீர்த்தாங்கி அப்பிரதேசத்தில் யுத்த சின்னமாக காணப்பபடுவது கண்டிக்கத்தக்கது எனவும் அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.