இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை வங்கதேச அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி, இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
கடைசி ஓவரில் ஒன் மேன் ஆர்மியாக தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றித் தேடித் தந்தார்.
இந்நிலையில் இப்போட்டி குறித்து வங்கதேச அணியின் தலைவரான ஷகிப் அல் ஹசன் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் ஆட்டத்தின் 19-வது ஓவரை ரூபல் திட்டமிட்டபடி தான் வீசினார். ஆனால் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
முதல் பந்தில் சிக்ஸர், அடுத்து ஒருநான்கு பிறகு மீண்டும் சிக்ஸர், இப்படிப்பட்ட ஒரு அதிரடி ஆட்டத்தை ஒரு சிலரால்தான் ஆட முடியும்.
இது எல்லாம் வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்று, அதை தினேஷ் கார்த்திக் செய்து காட்டியுள்ளார். முதல் 2 பந்தில் 10 ஓட்டங்கள் எடுத்தவுடனே ரூபல் பதற்றமடைந்துவிட்டார்.
இது இயற்கையான ஒன்று தான், இது போன்ற சூழ்நிலைகள் எதிர்காலத்தில் வந்தாலும், நான் ரூபலிடம் பந்தை கொடுப்பேன். இதற்காக அழுது ஒரு பயனும் இல்லை.
இதே போன்ற சூழல் அடுத்து ஏற்படும் போது இன்னு சிறப்பாக ஆட முடியும் அவ்வளவே. நிறைய நெருக்கமான போட்டிகளையும் இறுதிப் போட்டிகளையும் இழந்திருக்கிறோம்.
நாங்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். இது எங்களுக்கு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என கூறியுள்ளார்.