Tuesday, March 13, 2018

How Lanka

பணம் வசூலிக்க பொய் கூறிய பொலிஸாருக்கு கிடைத்த அதிர்சி

மாத்தளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தது ஒரு தனியார் பேருந்து.

அதன் சாரதி சட்டதிட்டங்களை யும், வீதி ஒழுங்குகளையும் கடைப்பிடித்து அதில் பயணம் செய்தவர்கள் வாய்திறந்து பாராட்டும் அளவுக்கு அந்தப் பேருந்தைச் செலுத்தியுள்ளார்.

கம்பகா நகரை அண்மித்த போது அந்தப் பேருந்தைப் பொலிஸ் அதிகாரியொருவர் நிறுத்தியுள்ளார்.

அந்தச் சாரதி எந்தத் தவறுமே செய்யவில்லை என்பதைப் பிரயாணிகளும் உணர்ந்திருந்ததால், சிறந்த சாரதியைத் தெரிவு செய்யும் ஒரு நிகழ்ச்சிக்காகவே பேருந்து நிறுத்தப்பட்டது என்று அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொண்டிருக்க, அந்தச் சாரதியும் திரும்பிப் பேருந்துக்கு வந்தார்.

என்ன நடந்தது எனப் பிரயாணிகள் ஆவலுடன் கேட்க, அலைபேசியில் உரையாடிக் கொண்டு வாகனத்தைச் செலுத்தினேன் என்பதற்காகவே தன்னை அந்தப் பொலிஸ் அதிகாரி நிறுத்தியதாகவும், அதற்கு அந்தச் சாரதி தன்னிடம் அலைபேசியே கிடையாது எனவும் தான் தலையைச் சொறிந்ததையே அந்தப் பொலிஸ் அதிகாரி அலைபேசியில் கதைத்ததாக எண்ணி விட்டார் என்றும் கூறியுள்ளார்.