Sunday, April 22, 2018

How Lanka

இலங்கையில் 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம்


இலங்கையில் 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர்கள் மாத்திரமே பயணிக்க முடியும்.

இந்நிலையில் 6 பேர் பயணிக்கக் கூடிய புதிய முச்சக்கர வண்டி ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.

இந்த முச்சக்கர வண்டியில் சாரதி மற்றும் 5 பேர் பயணிக்க முடியும். அதற்கமைய மேலும் 3 பேர் பயணிக்க கூடிய வகையில் இந்த புதிய முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்திற்கமைய 3 பயணிகள் மாத்திரமே ஒரு முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியும். எனினும் இந்த புதிய தயாரிப்பு மூலம் அதிக வசதிகள் மற்றும் இலகுவாக பயணம் மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான முச்சக்கரவண்டிகள் ஆசிய நாடுகளில் மாத்திரம் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.