Saturday, April 28, 2018

How Lanka

சென்னை அணியை வீழ்த்தியது மும்பை

சென்னை அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 27-வது லீக் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரா்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்சனும் தொடக்கத்தில் இருந்தே சிறிது தடுமாற்றத்துடன் விளையாடி வந்தனா்.

இந்நிலையில் ஷேன் வாட்சன் குணால் பாண்ட்யா போட்ட பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இவரை அடுத்து இடது கை ஆட்டகாரரான சுரேஷ் ரெய்னா களம் கண்டார்.

சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்த அம்பத்தி ராயுடு விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தார். இதனால் அணியின் ஓட்டம் சற்று வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

பின்னா் மும்பை அணியின் பந்துகளை நாலபுறமும சிதறடிக்க தொடங்கினார் அம்பத்தி ராயுடு. வாட்சனை போல குணால் பாண்ட்யாவின் சுழலில் அம்பத்தி ராயுடும் 46(35) சிக்கி ஆவுட்டாகினார்.



இவரை அடுத்து உலகின் சிறந்த பினிஷர் என அழைக்கப்படும் தலைவர் டோனி களத்தில் தோன்றி ரசிகர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தினார்.


பின்னா் டோனியும் 26(21) கடைசி தருவாயில் மெக்லெனஹான் போட்ட பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப அடுத்த வந்த அதிரடி ஆல் ரண்டா் பிரோவும் அடுத்த பந்திலேயே நடையை கட்டினார்.

இதனால் மைதானத்தில் அமைதியான ஒரு சூழ்நிலை நிலைவியது. இருந்த போதும் மறுமுனையில் இருந்த சுரேஷ் ரெய்னா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காட்டிய வண்ணம் இருந்தார்.

கடைசி ஓவரில் அடிக்க நினைத்து சாம் பில்லிங்ஸ் 3 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னா் கடைசியில் 20 ஓவா்கள் முடிவில் சென்னை அணி 169 ஓட்டங்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 75(47) ஜடேஜா ஓட்டம் ஏதும் ஏடுக்காமல் களத்தில் இருந்தன.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசிய குணால் பாண்ட்யா மற்றும் மெக்லெனஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினா். பின்னா் ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய பங்கிற்கு 1 விக்கெட்டும் வீழ்த்தினா்.


170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், லிவிஸ் களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பத்திலிருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மும்பை அணியின் ரன் விகிதம் சீரான விகிதத்தில் எகிறியது.

சிறப்பாக ஆடி வந்த சூர்யாகுமாய் யாதவ் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்தபடியாக அணியின் தலைவர் ரோகித் சர்மா வந்தார்.

லிவிஸ்-ரோகித் சர்மா ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தால், சென்னை அணி வீரர்கள் விக்கெட் எடுக்க திணறினர்.

இருப்பினும் இறுதிக் கட்டத்தில் லிவிசின் விக்கெட்டை தாகிர் எடுத்தாலும், ரோகித் சர்மா ஒரு புறம் தன்னுடைய அதிரடியை காட்டினார்.

ஆட்டத்தின் 19-வது ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை விளாசிய ரோகித் அரைசதம் கடந்தார். இறுதியாக மும்பை அணி 19.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா 56 ஓட்டங்களும், பாண்ட்யா 13 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தையும் சென்னை தொடர்ந்து முதலிடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சென்னை அணிக்கு மும்பை அணி முட்டுக் கட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.