இந்திய பெண்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயிற்சி அளிக்கும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. காஷ்மீர் பெண்களுக்கான ரக்பி விளையாட்டினை வளர்ச்சியடைய செய்வதற்காக நாமல் ராஜபக்ச முன்வந்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.
காஷ்மீர் பெண்கள் ரக்பி அணியின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக நாமலிடம் உதவி கோரிய நிலையில் நாமல் அதற்கான உதவிகளை வழங்கியிருந்தார்.
அவர்களுக்காக முதல் பயிற்சியை வழங்கும் நோக்கி நாமல் ராஜபக்ச தலையீட்டில் பயிற்சி குழுவொன்று காஷ்மீர் நோக்கி சென்றது. அந்த குழுவுடன் நாமலும் சென்றுள்ள நிலையில் முதல் பயிற்சியை ஆரம்பித்துள்ளார். நாமலின் இந்த உதவிக்கு அந்த நாட்டு சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பயிற்சியின் போது காஷ்மீர் விளையாட்டு வீராங்கனைகள் நாமலுக்கு மொழி கற்பிக்க முயற்சிக்கும் காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.