Wednesday, April 11, 2018

How Lanka

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது காற்று மின் நிலையத்தை உடைந்தெறிந்த சீனா

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது காற்று மின் நிலையத்தை உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தில் குறித்த காற்று மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 99 வருடங்களுக்கு சீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காற்று மின் நிலையம் அகற்றப்பட்டுள்ளது.

நிலையத்தை தொடர்ந்து நடத்தி செல்வதெற்கு என்றால் அதற்காக வரி செலுத்த வேண்டும் என சீன நிறுவனம் மின்சார சபையிடம் அறிவித்துள்ளது.

அந்த நிலையத்தினால் 35 மெகாவோட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலைமை காரணமாக இந்த மின்நிலையத்தை ஹம்பாந்தோட்டை வலஸ்புகல பிரதேசத்தில் உள்ள சூரிய சக்தி மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.