Wednesday, April 25, 2018

How Lanka

வடகொரிய தலைவர் உரையின் போது தூங்கிய அதிகாரி மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு?

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொண்டு வந்த அணுஆயுத சோதனையை வடகொரியா இனி நடத்தாது என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் சமீபத்தில் அறிவித்தார்.


இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடந்தது, கூட்டத்தில் முக்கிய ராணுவ தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தினரிடையே கிம் ஜாங் உரையாற்றி கொண்டிருந்த போது மூத்த ராணுவ தலைவரான ரி மவுங் சூ (84) தலையை குனிந்தவாறு தூங்கியுள்ளார்.