சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா உங்கள் மேல் எங்களுக்கு எப்போது அன்பும், அக்கறையும் இருக்கிறது என்று டுவிட் செய்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் பீல்டிங் செய்து கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீது செருப்புகளை வீசினர்.
இருப்பினும் அந்த செருப்பைக் கண்ட ரவீந்திர ஜடேஜா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கால் பந்து போல் எட்டி உதைத்தார், மற்றொரு வீரரான டூப்ளிசிஸ் கையில் மற்றொரு செருப்பை எடுத்துக் கொண்டு முகத்தை ஒரு மாதிரி பாவனை செய்தார்.
அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்த இரண்டு புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது எங்களுக்கு எப்போதும் அன்பும், அக்கறையும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த டுவிட்டை வைரலாக்கி வருகின்றனர்.