Wednesday, April 4, 2018

How Lanka

வென்றார் ரணில் - புளுகத்தில் ரணில் - நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மாதம் 21ம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று காலை முதல் நாடாளுமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதன்படி குறித்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய பிரதமர்,.....



“நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம்.

இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்ட செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் பிரதமருக்கு ஆதரவாக 122 பேரும் எதிராக 76 பேரும் வாக்களித்திருந்தனர. இந்த வாக்கெடுப்பில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.