Saturday, April 14, 2018

How Lanka

புதுவருடதினத்திலும் போக்குவரத்து பொலிஸாரின் கேவலமான அவா

நேற்றைய தினம் போக்குவரத்து பொலிஸாரின் செயல் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை பெற்றது.

நேற்றைய தினம் தமிழ் சிங்கள புத்தாண்டு தினமாகும். நேற்றைய தினம் காலை மக்கள் ஆலயங்களுக்கு தமது குடும்பமாக வழிபாட்டுக்கு செல்லும் வேளைகளில் வீதியில் திடீரென்று வந்து ஆங்காங்கே நின்று செல்லும் மக்களை தங்களுடைய இஸ்டப்படி கண்டபடி மறித்து விசாரணை எனும் பெயரில் பணம் பறிக்க முட்பட்டுள்ளனர்.

இச்செயல் மக்கள் மத்தியில் கடும் வெறுப்பை பெற்றது. புத்தாண்டு தினத்தில் இவங்களுக்கு மட்டும் லீவு இல்லையா என சில மக்கள் திட்டிக்கொண்டு சென்றதையும் கவனிக்க கூடியதாக இருந்தது.


திடீரென முன்னெடுத்த வீதிச் சோதனை நடவடிக்கையின் போது 10147 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 24 மணிநேர காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 233 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் அதிகமானவை மது போதையில் வாகனம் செலுத்தியதனால் ஏற்பட்டவை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.