குருணாகல் பகுதியில் மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்
பண்டுவஸ்நுவர ரன்முழுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த காதல் ஜோடி ஒன்று மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தம் காரணமாக 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், 12 வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் விகாரைக்கு பெற்றோர் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவி தனது காதலனுடன் ஸ்கூட்டர் ஒன்றில் சென்றுள்ளார்.
எனினும் இருவரும் மலை பகுதி உள்ள இடம் ஒன்றிற்கே சென்றுள்ளனர். இதன் போது அழுத்தம் அதிகமானதால் மோட்டார் சைக்கில் மலையில் இருந்து கீழே விழுந்துள்ளது.
அரை மணித்தியாலங்களின் பின்னர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் மாணவி அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.