புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் பெய்த அடைமழை காரணமாக உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது.
புத்தளம், சோல்டன் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் புத்தளம் உட்பட பல பிரதேசங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. தற்போது அடைமழையை தொடர்ந்து வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை நீரில் உப்பு கரைந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முழுமையாக உப்பு நீரில் கரைந்துள்ளது.
பொக்கிஷமாக விளையும் உப்பு இயற்கையின் மாறுபட்ட தாக்கங்கள் காரணமாக தொடர்ந்தும் பாதிப்படைந்து வருவதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.