Wednesday, May 16, 2018

How Lanka

அனந்தி சசிதரனின் சிபாரிசுவின் பெயரில் மூலாய் சைவ பிரகாசபாடசாலைக்கு புதிய வகுப்பறைக்கட்டிடம்

பல வருடங்களாக கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு போதுமான வகுப்பறைக்கட்டிடங்கள் இல்லாத மூலாய் சைவ பிரகாசபாடசாலைக்கு  வடமாகாண கௌரவ மகளிர் விவகார அமைச்சர்  அனந்தி சசிதரனின் சிபாரிசுவின் பெயரில் வகுப்பறைக்கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.



03.05.2018 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற  கட்டிடத்திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் மேலும் அப்பிரதேசத்தின் வளர்சிக்கும் பாடசாலைகளுக்கும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிந்து மேலும் பல உதவிகளை செய்வதாகவும் தனதுரையில் அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டிருந்தார்.


-----------------