Monday, May 21, 2018

How Lanka

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதத்தினை பல்கலைக்கழக மாணவர்கள் மீள பார்வையிடுவது சிறந்தது என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கறுப்பு உடையை போட்டுக் கொண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அரசியல்வாதிகள் வரவேண்டாம் என கூறுவதற்கும் ஒரு முறை இருக்கின்றது. அந்த முறையை பல்கலைக்கழக மாணவர்கள் தவறவிட்டுள்ளனர்.

மேலும் அரசியல்வாதிகளை நிராகரிக்கவேண்டும் என்றால் அரசியல்வாதிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. இந்த மக்களிடமிருந்து வாக்குகளை பெற்ற மக்கள் பிரதிநிதிகள்.

அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கௌரவம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கப்படவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனியே பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்படவில்லை.