யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
56 வயதான ஜெகனாந்தன் மற்றும் 29 வயதான சஞ்சீவன் ஆகியோர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று காலை வடமராட்சி கரணவாய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்டுள்ளனர். இதன்போது அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் நகரில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.