ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பை, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி திட்டித் தீர்த்துள்ளார்.
இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரி, அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து ஈரான் ஜனாதிபதி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
2105ம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட அணுத் திட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய ஐந்து நாடுகளும் உடன்படிக்கையின் விடயங்களை மதித்து நடந்து கொண்டால் தொடர்ந்தும் உடன்படிக்கைக்கு மரியாதை வழங்கப்படும் என ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.