நாட்டின் சட்டத்துறையில் காணப்படும் ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்தப் போவதாக சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கருத்து வெளியிடுகையில்,
சட்டத்துறையில் ஊழல் பேர்வழிகள் பற்றியும், முறைகேடுகள் பற்றியும் எனக்குத் தெரிய சகல விடயங்களையும் இலங்கைத் சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஒப்படைப்பேன்.
சாட்சியங்களுடன் இந்த விபரங்கள் ஒப்படைக்கப்படும்.
முறைகேடுகள் மோசடிகள் பற்றிய விபரங்களை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்னிடம் அதிகாரபூர்வமாக கடிதம் மூலம் கோரியுள்ளது. அந்தக் கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
சட்டத்துறையில் நிலவும் மோசடிகள் முறைகேடுகளினால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் பற்றிய விபரங்களையும் திரட்டி அதனையும் சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
இந்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்பதனை உன்னிப்பாக அவதானிப்பேன் என சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்டத்துறையில் நிலவும் மோசடிகள் குறைபாடுகள் மற்றும் நீதவான்களினால் இழைக்கப்படும் தவறுகள் குறித்து அண்மையில் சுகந்திகா பெர்னாண்டோ வெளியிட்ட கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.