வடமாகாண மகளிர் விவகாரம், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் அமைச்சர் அனந்தி சசிதரன் தொழிற்பயிற்சி நிலையங்களின் களநிலைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (24.05.2018) காலை மு.ப 10.00மணிக்கு குறித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவற்றின் களநிலைப்பாடுகளைப் பார்வையிட்டதுடன் அங்கு பணிபுரிகின்ற பணியாளர்களுடனும் அலோசனை நடத்தியுள்ளார்.
வடமாகாண தொழிற்துறை திணைக்களத்திற்குட்பட்ட குருநகரில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிலையத்தையும், பாசையூர் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்குட்பட்ட பற்றிக் துணி, மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையத்தையும் மற்றும் மணியம் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள தும்புக்கைத்தொழில் நிலையம் ஆகிய மூன்று தொழிற்பயிற்சி நிலையங்களின் களநிலைப்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து இக் களவிஐயத்தின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இக் களவிஐயத்தில் புதிய மாகாண தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு கே.சிறிமோகனன், திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்பயிற்சி நிலைய போதனாசிரியர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
--------------------
------------------------------