வலிகாமம் வடக்கில், இந்த வார ஆரம்பத்தில் இருந்து சுமார் 100 ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் மயிலிட்டி துறை வடக்கு ஜே/251 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும, ஒட்டகப்புலம் ஜே/252 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும், ஜே/254 பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும், 244 வசாவிளான் கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும் இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளன.
சிறு சிறு பகுதிகளாக இவ்வாரம் முதல், குறித்த காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இந்த பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் வேலி அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.