ஆறு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் இதற்காக ஆயத்தமாகுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 3ம் திகதி நடைபெற்ற சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பதவிக் காலம் முடிவடைந்த வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கும், ஒக்ரோபர் மாதம் பதவிக் காலம் பூர்த்தியாகும் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கும் இவ்வாறு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தேர்தல் முறைமை தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
எவ்வாறெனினும், விருப்பு வாக்கு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முறைமை குறித்து ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.