இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
இதன்படி, குற்ற விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது “விடுதலைப் புலிகளின் மீள்வருகை” குறித்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே, தற்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்த கருத்து தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடு குறித்த விசாரணைகள், குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.