Wednesday, November 21, 2018

How Lanka

தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் சாரதிகளே கவனம்

வவுனியா, தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்த போக்கினால் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியானது வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது.


இந்த நிலையில் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையினால் வீதியின் இரு மருங்கிலும் குழாய் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அகழப்படும் வீதியின் பகுதிகள் மீண்டும் சரியான முறையில் செப்பனிடப்படுவதில்லை.


இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு தெரியப்படுத்தியும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.