Sunday, December 16, 2018

How Lanka

பாரிய சூறாவளியாக உருவெடுத்துள்ள தாழமுக்கம் - முல்லைத்தீவில் உட்புகுந்த கடல்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவான தாழமுக்க மண்டலமாக மாறி தற்பொழுது பாரிய சூறாவளியாக உருவெடுத்துள்ள நிலையில் முல்லைத்தீவு கடலின் கொந்தளிப்பு தற்பொழுது அதிகமாக காணப்படுகின்றது.


மேலும் குறித்த பிரதேச குடியிருப்புகள் பலத்த சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதேசங்களில் கடல் நீர் உட்புகுந்ததால் மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் கரையோரப்பகுதி மக்கள் அவதானமாக செயற்படுமாறு முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.