Monday, December 17, 2018

How Lanka

OnePlus 6T கைப்பேசி 10GB RAM உடன் அறிமுகம்

OnePlus 6T கைப்பேசியின் McLaren எனும் பதிப்பானது இவ் வாரம் முதல் விற்பனைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் முக்கியமானது பிரதான நினைவகமாக 10GB RAM உள்ளடக்கப்பட்டுள்ளமை ஆகும்.

அத்துடன் இக் கைப்பேசியானது வெறும் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகக்கூடியதாகவும் இருக்கின்றது.

இவற்றுடன் 6.41 அங்குல அளவு, 2280 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரை, Qualcomm Snapdragon 845 Processor, 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 6 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 20 மெகாபிக்சல்கள் மற்றும் 16 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் கிடைக்கக்கூடிய இக் கைப்பேசியின் விலையானது 649 யூரோக்கள் ஆகும்.
Read More
How Lanka

iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பின் சிறப்புக்கள்


ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கென iOS இயங்குதளத்தினை உருவாக்கியுள்ளமை தெரிந்ததே.

இதன் புதிய பதிப்புக்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது 12.1.2 எனும் பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.

இப் பதிப்பானது முன்னைய பதிப்பினை காட்டிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பல தவறுகள் நீக்கப்பட்டும் உள்ளன.

தவிர புதிய வசதிகள் சிலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த புதிய வசதிகள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ் வீடியோவினை கீழே காணலாம்.

தற்போது பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் முழுமையான பதிப்பு அடுத்த வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More

Wednesday, July 4, 2018

How Lanka

கூகுள் நிறுவனத்தின் எச்சரிக்கை

உலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜிமெயில் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்திட்டம் மற்றும் விலைகள் தொடர்பான தகவல் சேவை குறித்து கூகுள் நிறுவனத்தின் மூலம், மூன்றாம் தரப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கூகுள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் தகவல்களை வாசித்தல் அதேபோன்று சமர்ப்பிக்கப்படும் தகவல்களை அழித்துவிடுவதற்கு இந்த தரப்பினருக்கு சந்தர்ப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமது கொள்கைக்கு முரண்பட்டதல்ல என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமது பயனாளிகளின் தரவுகளை பயன்படுத்தும் அபாயகரமானதாக இந்த சந்தர்ப்பம் இருப்பதாக இந்த நிறுவனம் மூன்றாம் தரப்பினர் தொடர்பில் செயற்படும் முறை புதுமையானது என்று சர்வதேச விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

ஜிமெயில் என்பது உலகப்புகழ் பெற்ற மின்னஞ்சல் சேவையாகும். உலகம் முழுவதிலும் 1.4 பில்லியன் பேர் ஜிமெயில் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Read More

Thursday, March 29, 2018

How Lanka

தகவல் திருட்டு சர்ச்சை - Facebook நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு முறைகள்

பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தால், பேஸ்புக் நிறுவனம் உலகளவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

அதன் செயல்பாடு பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளன. இதனால், அதன் ‘கிரைம் ரேட்’ கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் ‘பேஸ்புக்’ உலகம் முழுவதும் 200 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

இதில், தங்களுடைய பொழுதுபோக்கு, பிடித்த விஷயங்கள், பெயர், படித்த பள்ளி, கல்லூரிகள், வேலை, பணியாற்றும் நிறுவனம், ஊர், குடும்ப உறவினர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை மக்கள் சேமிக்கின்றனர்.

இத்தகவல்கள், அவர்களுக்கே தெரியாமல் பல்வேறு முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தப்படும் திடுக்கிடும் தகவல் சமீபத்தில் வெளியானது.

தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை மாற்றுவது, வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த தகவல்களை கொடுத்து வியாபாரத்தை பெருக்குவது, இந்த தகவல்களின் அடிப்படையில் வர்த்தக வியூகத்தை மாற்றுவது, விளம்பரங்கள் செய்வது என பல்வேறு செயல்களுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 2016ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் செல்வாக்கை உயர்த்துவதற்காக பேஸ்புக்கை பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்களை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் திருடியதாக சமீபத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, அடுத்த பூகம்பம் இந்தியாவில் வெடித்தது. 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் செல்வாக்கை உயர்த்துவதற்காக, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்துடன் அக்கட்சி ஒப்பந்தம் செய்து இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பகிரங்க குற்றச்சாட்டை கூறினார்.

இந்திய அரசின் இந்த கடும் நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு உலக நாடுகளும் விழித்துக் கொண்டுள்ளன. பேஸ்புக் நிறுவனமும், கேம்பிரிட்ஜ் அனலிடிகாவும் தங்கள் நாடுகளிலும் தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்துகின்றன.

இதனால், ‘கிரைண்டரில் சிக்கிய இட்லி மாவு போல்’ பேஸ்புக் நிர்வாகம் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

தகவல் திருட்டு சம்பவத்துக்காக ஜுகர்பெர்க் பகிரங்க மன்னிப்பு கேட்ட போதிலும், தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் அதன் செயலை எந்த நாடும் மன்னிப்பதாக இல்லை.

இதற்கிடையே, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் இதுவரை திருடி சேர்த்த பேஸ்புக் தகவல்கள் அனைத்தையும் இங்கிலாந்து அரசு அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

பேஸ்புக் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலால், உலகளவில் அதன் பங்குகளின் மதிப்பு 15 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் திருட்டு குற்றச்சாட்டால் ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக் நிர்வாகம், எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டுகள் நடப்பதை தடுப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது. அடுத்த சில வாரங்களில் இவை செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

பேஸ்புக் எடுத்துள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகள்,

தற்போது, ‘பிரைவசி செட்டிங்’ மற்றும் முக்கியமான ‘டூல்’களை மக்கள் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இனிமேல், பேஸ்புக் பயன்படுத்துவோர் ‘யூசர் செட்டிங்’கில் எளிதாக நுழைந்து, தகவல்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தலாம்.

தங்களின் பேஸ்புக் முகவரியை யார் பார்க்கிறார்கள், அவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தேவையில்லாத அல்லது விரும்பாத தகவல்களை உடனடியாக ‘டெலிட்’ செய்யலாம். அதற்கான ‘டூல்’சும் ‘செட்டிங்’கும் ‘ஷார்ட் கட்’ முறையில் இனிமேல் எளிதாக கையாளும் வகையில் அமைக்கப்படும்.

பேஸ்புக்கின் சேவை மற்றும் புள்ளி விவர கொள்கை, பேஸ்புக் எப்படி தகவல்களை சேகரிக்கிறது, அவற்றை எப்படி பயன்படுத்துகிறது என்பது பற்றிய விவரங்களை மக்கள் இனிமேல் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் கிடைக்கும் தகவல்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களுக்கு பயன்படுத்த ‘பங்குதாரர் பிரிவு’ (பார்ட்னர் கேட்டகரிஸ்) என்ற வசதி பயன்படுத்தப்படுகிறது. இது இனிமேல் ரத்து செய்யப்படும்.
Read More

Wednesday, March 21, 2018

How Lanka

பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை தரும் புதிய சிகிச்சை

முதுமையினால் கண் பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் கண் பார்வை தரும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

முதுமையினால் கண் தசைகளில் பலவீனம் ஏற்படுகிறது. இதனால் ஏராளமானோர் தங்கள் கண் பார்வையை இழக்கின்றனர். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. தசைகளின் வலிமை குறைவதால் கண் பார்வைக்கு முக்கியமான மாகுலார் பாதிக்கப்படுகிறது. இதனால் முதியவர்களால் படிக்கவோ, வாகனங்கள் ஓட்டவோ முடிவதில்லை.

இந்நிலையில், இந்த பிரச்சினையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில்,

உடல் உறுப்புகள் மீண்டும் வளர்வதற்கு முக்கிய காரணம் ஸ்டெம் செல்கள்( தண்டு உயிரணுக்கள்) ஆகும். இவை பாதிக்கப்பட்ட உறுப்புகளில் புதிய செல்களை உருவாக்கும் திறன் கொண்டது.

இந்த செல்கள் மூலம் கண் பார்வையை மீண்டும் பெற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கண் பார்வை இழந்தவர்களின் கண்ணில் உள்ள ‘ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம்’ என்ற செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஸ்டெம் செல்கள் மூலம் ‘ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம்’ செல்களை மீண்டும் வளரச் செய்ய முடியும். அச்செல்களை வளர்த்து அதனை நோயாளியின் கண்களில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினால் மீண்டும் கண் பார்வை பெறலாம்.

என கூறப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை இரண்டு நோயாளிகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு கண்பார்வை திரும்பக் கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

Tuesday, February 27, 2018

How Lanka

கமெரா தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியது கனோன்

புகைப்படக் கமெராக்களை வடிவமைப்பதில் பெயர் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக கனோன் நிறுவனம் காணப்படுகின்றது.

இந்நிறுவனம் கமெராவில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்தியுள்ளது.

இதன்படி கமெராவில் பொருத்தப்பட்டுள்ள Flash ஆனது சிறந்த கோணத்தினை நோக்கி தானாக திரும்பும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

470EX-AI எனும் தான் உருவாக்கிய புத்தம் புதிய கமெராவிலேயே இந்த அதிரடி தொழில்நுட்பத்தினை கனோன் புகுத்தியுள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் ஆனது புகைப்படம் எடுக்க வேண்டிய தூரம், நோக்கம் என்பவற்றினை துல்லியமாக கணிக்கின்றது.

அதன் பின்னர் தானாகவே Flash இனை சரிசெய்கின்றது.

இதன் மூலம் நேரச் சிரமம் இன்றி அழகிய புகைப்படங்களை விரைவாக எடுத்துக்கொள்ள முடியும்.
Read More

Wednesday, February 7, 2018

How Lanka

iOS 11.3 பதிப்பினூடாக மின்கல பாவனைக் காலத்தினை நீடிக்கக்கூடிய வசதியினை Apple நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

சமகாலத்தில் ஆப்பிள் நிறுவனம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்றாக அதன் சாதனங்களின் மின்கலங்களின் சார்ஜ் விரைவாக குறைவடைதலும் காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு மின்கலங்களை முகாமை செய்வதன் ஊடாக அவற்றின் பாவனைக் காலத்தினை நீடிக்கக்கூடிய வசதியினை தனது புதிய இயங்குதளப் பதிப்பில் உள்ளடக்கியுள்ளது.

iOS 11.3 எனும் குறித்த பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


எனினும் இது பீட்டா பதிப்பாகவே வெளியிடப்பட்டுள்ளது, இதனை ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்த முடியும்.

இதன் ஒரிஜினல் பதிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Read More
How Lanka

Honor நிறுவனம் அறிமுகம் செய்யும் நான்கு கமெரா ஸ்மார்ட் கைப்பேசி

பிரதான கமெராக்களை டுவல் கமெராவாக கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் செல்ஃபி கமெராக்களையும் டுவல் கமெராவாகக் கொண்ட புதிய ஸமார்ட் கைப்பேசியினை Honor நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.

இக் கைப்பேசியில் டுவல் பிரதான கமெராக்கள், டுவல் செல்ஃபி கமெராக்கள் என மொத்தம் நான்கு கமெராக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Honor 9 Lite எனும் குறித்த கைப்பேசியானது 5.65 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resoluion உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Kirin 659 Processor , பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் இவற்றின் பிரதான கமெராக்கள் 13 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்கள் உடையதாகவும், செல்ஃபி கமெராக்களும் இதே மெகாபிக்சல்களை உடையனவாகவும் காணப்படுகின்றன.
Read More

Friday, February 2, 2018

How Lanka

புதிய மைல்கல்லை எட்டியது ஆப்பிளின் iPhone X

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியில் Face ID தொழில்நுட்பமும் தரப்பட்டிருந்தமையால் சிறந்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 8 மில்லியன் iPhone X கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வருட கிறிஸ்துமஸ் காலப் பகுதியில் மொத்தமாக 22.39 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

எனினும் iPhone 8 மற்றும் iPhone 8 Plus ஆகிய இரு கைப்பேசிகளின் விற்பனையானது iPhone X கைப்பேசியின் விற்பனையிலும் அரைப் பங்காகவே கணப்பட்டுள்ளது.

மேலும் இவ் அதிகரித்த ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையானது ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்தும் கைப்பேசி சந்தையினை ஆக்கிரமித்து வருகின்றமையை எடுத்துக்காட்டுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More
How Lanka

ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது ரெலிகிராம் ஆப்ஸ் - காரணம் இது தான்

வாட்ஸ் ஆப் போன்று குறுஞ்செய்திகள், கோப்புக்களை பரிமாறிக்கொள்ளும் வசதியை தரும் அப்பிளிக்குஷனாக ரெலிகிராம் விளங்கி வருகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனை தனது ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

பொருத்தப்பாடற்ற அம்சம் ஒன்றினை உள்ளடக்கியிருந்ததன் காரணமாகவே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையினை அடுத்து Telegram X எனும் அப்பிளிக்கேஷனை உடனடியாக அன்ரோயிட் சாதனங்களில் செயற்படக்கூடியவாறு அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் இப் புதிய அப்பிளிக்கேஷனை iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்வது தொடர்பில் பரீட்சிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Friday, January 19, 2018

How Lanka

நாய்களுடன் நாம் கதைக்கலாம் - வருகின்றது கருவி Pet Translator

மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழும் செல்லப்பிராணிகளாய் நாய்கள் உள்ளன.

இந்நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள புதிய வழிமுறையொன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழிமுறை மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்குகளின் குரலொலி மற்றும் முக பாவனைகளை எளிமையாக ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய முடியும்.

வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கான் லெபோட்சிகோஃப் என்பவர் நாய்களின் உடல் மொழி மற்றும் அவை தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகள் குறித்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு செய்து வருகிறார்.

தனது ஆய்வு மட்டுமின்றி பல்வேறு இதர ஆய்வாளர்களின் தகவல்களைக் கொண்டு Pet Translator (விலங்கு மொழிமாற்றம்) எனும் சாதனத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றார்.

அத்துடன் நாய்கள் குரைத்தல், உறுமல் மற்றும் ஊளையிடல் மூலம் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை செயற்கை நுண்ணறிவினால் கண்டறிய முடிகிறது.

Machine Learning மூலம் கம்ப்யூட்டர்கள் உதவியுடன் நாய்களின் உறுமல் மற்றும் வால் அசைவுகளால் அவை வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை புரிந்துகொள்ள முடியும் என லெபோட்சிகோஃப் தெரிவித்துள்ளார்.

இன்னும் 10 ஆண்டுகளில் நாய்கள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மனிதர்களால் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

தற்சமயம் லெபோட்சிகோஃப் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறையானது நாய்களின் மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்.

இவ்வாறான தொழில்நுட்ப சாதனங்கள் விலங்குகள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மிக எளிமையாக மனிதர்கள் புரிந்துகொள்ள வழி செய்யும்.
Read More

Friday, November 3, 2017

How Lanka

உலகமெங்கு சில மணி நேரம் முடங்கியது வட்ஸ்அப்


முக்கிய தகவல் தொடர்பு செயலியான வட்ஸ்அப், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒருமணி நேரமாக உலகமெங்கும் இயங்காததால் தகவல் பரிமாற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

முக்கிய தகவல் தொடர்பு செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மணி நேரமாக வட்ஸ்அப் செயலி சரியாக இயங்கவில்லை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்தனர்.


கூகுள் பிளே ஸ்டோரில் வட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் நிலையில், சில மணிநேர இடையூறால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதனையடுத்து, கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வட்ஸ்அப் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.

வாட்ஸ்அப் செயலி ஏற்கனவே பலமுறை கோளாறு ஏற்பட்டாலும், அதிக நேரம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். முன்னதாக, கூகுள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியின் போலி பதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த போலி செயலிய பதிவிறக்கம் செய்யும் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் தகவல் திருட்டு மற்றும் இதர குறைபாடுகளை ஏற்படுத்த கூடியது என்றும் கூறப்படுகிறது
Read More

Tuesday, September 19, 2017

How Lanka

தொழிநுட்பத்தின் அடுத்த கட்டம் - ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கலாம்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில், ஒளித்தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் சோதனையை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர் (Photonic computer) எனப்படும் என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

Wednesday, September 6, 2017

How Lanka

மிகச்சிறிய அளவிலான ஆளில்லா விமானம் உருவாக்கம்

அண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம்பிடித்து வருகிறது, வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர், இருந்தும் ஆளில்லா விமானங்களில் கெமராக்கள் பொருத்தப்படுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.



இந்நிலையில் அண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அது மிகச்சிறிய அளவிலானது, இதை உள்ளங்கையில் அடக்கமாக வைத்துக்கொள்ள முடியும், இதில் 0.3 எம்.பி. திறனுள்ள கெமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கலாம், இதை புற்தரையிலும் தரையிறக்கலாம். இதில் உள்ள பேட்டரியை 30 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும்.
Read More

Friday, July 28, 2017

How Lanka

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.3 பில்லியனை கடந்து WhatsApp சாதனை


பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் வட்ஸ் அப் சேவையானது பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. இந்த வரிசையில் தற்போது செயற்பாட்டு நிலையில் உள்ள நாளாந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.3 பில்லியனை கடந்து மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் காரணமாக நாள்தோறும் சுமார் 4.5 பில்லியன் புகைப்படங்கள் பகிரப்படுவதுடன் ஒரு பில்லியன் வரையான வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றது. இவை தவிர 55 பில்லியன் குறுஞ்செய்திகளும் நாளாந்தம் அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் உலகெங்கிலும் ஒரு பில்லியன் பயனர்களை எட்டிய வட்ஸ் அப் ஆனது இந்த வருடம் நாளாந்த செயற்பாட்டு நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை ஒரு பில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. உலகெங்கிலும் சுமார் 60 வரையான மொழிகளில் வட்ஸ் அப் சேவை கிடைக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More

Friday, July 21, 2017

How Lanka

செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வெளியாகிறது iPhone 8

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வடிவமைப்பில் காலடி பதித்து இவ் வருடம் 10வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகின்றது.
இதனைக் கருத்தில்கொண்டு மூன்று வகையான iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் இக் கைப்பேசிகளுக்கு இப்பவே எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான Galaxy Note 8 இனை ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்தே iPhone 8 கைப்பேசி வெளியாகும் தினமும் வெளியிடப்பட்டுள்ளது.
iPhone 8 கைப்பேசிகளில் Apple A11 Processor, iOS 11 என்பன உள்ளடக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.


Read More

Monday, December 26, 2016

How Lanka

அப்பிள் Smart Watch ற்கு போட்டியாக களமிறங்கும் Google இன் Smart Watch

புத்தாண்டு வருவதை தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் அதன் பிரேத்தியேக புதிய படைப்புகளை வெளியிட்டுவருகிறது.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் அன்ட்ரொய்ட் தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
அன்ட்ரொய்ட் ஸ்மாட்போன்களை தொடர்ந்து அன்ட்ரொய்ட் இயங்குதளத்தில் இயங்ககூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த கைக்கடிகாரம் தொடு திரை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, 2017 ஆம் ஆண்டு மார்ச் மதத்தில் இந்த வகை கைகடிகாரங்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் கைக்கடிகாரம் அன்ட்ரொய்ட் 2.0 தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன தயாரிப்பாளர் செப் ஜாங் தெரிவித்துள்ளார்.
இந்த கைக்கடிகாரத்தில் நேரம் பார்ப்பதுடன் கூகுள் தேடுப்பொறி தளத்தை இதில் பயன்படுத்த முடியும். மேலும் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய இயலும், மிக சிறிய தொடு திரை அமைந்துள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் குறிப்புகளை கூட சேமித்து வைக்க இயலும்.
கூகுளின் அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன் மற்றும் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அன்ட்ரொய்ட் கைக்கடிகாரத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

Friday, October 14, 2016

How Lanka

ஹவாய் ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போன்

அக்டா கோர் கிரின் 620 இயங்கும் ஹவாய் ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போன்

ஹவாய் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹவாய் ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போன் நாட்டில் ரூ.9,999 விலையில் கிடைக்கும். இந்த ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போன், சீன உற்பத்தியாளர்களிடமிருந்து 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல்' ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒற்றை சிம் ஆதரவு கொண்ட ஹவாய் ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் EMUI 4.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. ஹவாய் ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 இன்ச் எச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz அக்டா கோர் கிரின் 620 சிபியூ ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஹவாய் ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போனில் BSI CMOS, f/2.0 அபெர்ச்சர், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.0 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi டைரக்ட், Wi-Fi ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 154x77.1x8.45mm நடவடிக்கைகள் மற்றும் 168 கிராம் எடையுடையது. இது வெள்ளை, கருப்பு, தங்கம் வண்ண வகைகளில் வருகிறது.

ஹவாய் ஹானர் ஹோலி 3 ஸ்மார்ட்போன் விவரங்கள்:

ஒற்றை சிம்

பொது

வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
நடவடிக்கைகள் (mm): 154x77.1x8.45
எடை (கி): 168
பேட்டரி திறன் (mAh): 3100
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை
வண்ணங்கள்: வெள்ளை, கருப்பு, தங்கம்

டிஸ்ப்ளே

திரை அளவு: 5.50
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 720x1280 பிக்சல்கள்

ஹார்டுவேர்

ப்ராசசர்: 1.2GHz அக்டா கோர் கிரின் 620
ரேம்: 2ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 16ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 128

கேமரா

பின்புற கேமரா: 13 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 8 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
ஸ்கின்:  EMUI 4.1

இணைப்பு

Wi-Fi 802.11 b/g/n
Wi-Fi டைரக்ட்
Wi-Fi ஹாட்ஸ்பாட்
ப்ளூடூத் 4.0
3.5 மிமீ ஆடியோ ஜாக்
மைக்ரோ-யூஎஸ்பி

சென்சார்கள்:

காம்பஸ்/மக்னேடோமீட்டர்
ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
கைரோஸ்கோப்
Read More

Friday, September 16, 2016

How Lanka

அடுத்த கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் சாம்சுங்

அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் பாரிய பிரச்சினை ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தது.

அதாவது மின்கலவடுக்கு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தான் புதிதாக அறிமுகம் செய்த லட்சக்கணக்கான Galaxy Note 7 கைப்பேசிகளை மீளப் பெற்றிருந்தது.

இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பிரதான நோக்கம் அப்பிளின் அறிமுகம் செய்துள்ள புதிய கைப்பேசிகள் மீதான பார்வையை குறைப்பதாகும்.

இந்த எதிர்பார்ப்பில் இடி விழுந்துள்ள நிலையில் உடனடியாக Galaxy A8 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்ய அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இப் புதிய கைப்பேசியானது 1080 Pixel கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவும், Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினை கொண்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
Read More

Thursday, August 25, 2016

How Lanka

உவர் நீரை நன்னீராக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை



உவர் நீரை நன்னீராக மாற்றுவதற்குரிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ள திருவையாற்றை சேர்ந்த, கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் கவியார்த்தனன் இளம் வயதில் புதிய கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.

இம்மாணவன் தேசியமட்டத்திலும் தெரிவாகி சாதிக்க எமது இணையத்தளம் வாழ்துகின்றது
Read More