Sunday, August 14, 2016

How Lanka

இந்தியாவின் 70வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியை ஏற்றினார் மோடி

டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.

இதில், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான பொலிசார் மற்றும் கமான்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடு சுதந்திரம் பெற தங்கள் இன்னுயிர் தியாகம் செய்த மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு இன்னும் எண்ணற்றோரை இந்நாளில் நினைவுகூர்வோம். இன்றைய தினம் நான் கொள்கைகள் பற்றி பேசப்போவதில்லை தொலைநோக்குத் திட்டம் குறித்து பேசப்போகிறேன்.

இந்திய தேசம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால் அனைத்து சவால்களுக்கும் தீர்வு காணும் திறன் தேச மக்களிடம் இருக்கிறது. இந்தியாவை இத்றகு முன் ஆண்ட அரசை சுற்றி சந்தேக வலைகளே இருந்தன. ஆனால், தற்போதைய அரசை சுற்றி மக்களின் கனவுகள் இருக்கின்றன.
சாமான்யனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசு இது. சாமான்யர்கள் மேம்பாட்டை பொறுப்புணர்ச்சியுடன் அரசு நிகழ்த்தி வருகிறது. நாட்டில் இரண்டு கோடி மக்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கின்றனார். ஏழை மக்கள்கூட ஓரிரு வாரங்களில் எளிமையாக பாஸ்போர்ட் பெற முடிகிறது. இதற்கு முந்தைய காலங்கள் நம் நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பதிவு செய்வதற்கே ஆறு மாதங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஜூலை மாதத்தில் மட்டும் 900 தொழிலதிபர்கள் இங்கு புதிய தொழில் தொடங்குவதற்காக பதிவு செய்துள்ளனர். குரூப் சி, டி பிரிவுக்குட்பட்ட 9000 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வை இந்த அரசு ரத்து செய்திருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் அரசாங்கம் மீதான மக்களின் எதிர்பார்புகள் மாறியுள்ளன. கொள்கை அறிவிப்புகளும், பட்ஜெட் அறிவிப்புகளில் அவர்கள் சமரசம் அடைந்துவிடுவதில்லை. கொள்கைகளுக்கும், திட்டங்களையும் எப்படி அரசு செயல்படுத்தியிருக்கிறது என்பதை நேரில் காண விரும்புகின்றனர். அந்தவகையில், முன்னர் நாளொன்றுக்கு சராசரியாக 55 முதல் 77 கி.மீ. அளவிள் கிராமப்புற சாலைகள் கட்டமைக்கப்பட்டன. ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 100 கி.மீ. அளவுக்கு கிராமங்களில் சாலைகள் நிறுவப்படுகின்றன. சூரிய எரிசக்தித் துறையில் 116% வளர்ச்சி கண்டுள்ளோம். நாள் ஒன்றுக்கு 30,000-35,000 கி.மீ. மின்சாரம் செலுத்தும் தடங்கள் நிறுவப்பட்டன. தற்போது அது நாள் ஒன்றுக்கு 50,000 கி.மீ. ஆக இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் சமையல் எரிவாயு 14 கோடி மக்களுக்கு கிடைத்து வந்தது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 4 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது. நமது எதிர்மறை எண்ணங்களை நாம் விட்டொழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள 18,000 கிராமங்களில் 10,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த சுதந்திர தின உரையை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். டெல்லியில் இருந்து வெறும் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஹத்ரஸ் கிராமத்துக்கு மின்சார வசதி கிடைக்க 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எல்.இ.டி. விளக்குகளை வெறும் ரூ.50-க்கு கிடைக்கச் செய்துள்ளது இந்த அரசு. சப்பார் துறைமுகத்துக்காக இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஒருங்கிணைந்துள்ளது சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கியுள்ளதற்கான சான்று. நாட்டின் பணவீக்கத்தை 6%-த்துக்கு மிகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டது. பருப்பு விலை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இருந்தும் அரசாங்கள் அந்த நெருக்கடியை மிக சாமர்த்தியமாக கையாண்டது. ஒரு ஏழையின் சாப்பாட்டுச் செலவு அவன் கைக்கெட்டாத சூழலுக்கு செல்லாமல் பார்த்துக் கொண்டது இந்த அரசு. குரு கோவிந்த் சிங்கின் 350-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் தருணத்தில் அவர் கூறியது என் நினைவுக்கு வருகிறது. "அடுத்தவர்களுக்காக தொண்டாற்றாத கரங்கள் எப்படி புனிதமானதாக கருதப்படும்" என்றார் அவர். நமது விவசாயிகள் கடும் வறட்சியைத் தாண்டியும் முன்பைவிட 1.5 மடங்கு அதிகமாக பருப்பு வகைகளை பயிரிட்டுள்ளனர். நமது விஞ்ஞானிகள் அதிக மகசூல் தரக்கூடிய 117 வகை விதைகளை கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உரங்களுக்கான தட்டுப்பாடு இத்தேசத்தின் பழைய வரலாறாகிவிடது. அரசு கஜானாவை காலி செய்வது முந்தைய அரசுகளின் பாரம்பரியமாக இருந்தது. ஆனால், நான் அத்தகைய நிலையை மாற்றியிருக்கிறேன். உலக நாடுகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதைவிட நமது அடையாளம் நாம் எதை முன்னிறுத்துகிறோம் என்பதே முக்கியம். கட்சியைவிட தேசமே முக்கியம். அரசின் கொள்கைகளில் தெளிவு இருந்தால், அரசின் நோக்கத்தில் தெளிவு இருந்தால் முடிவுகள் தடையற்றதாக இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் உத்தரப் பிரதேச கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்பது வழக்கமான கதையாக இருக்கும். இன்று என்னால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும் உத்தரப் பிரதேச கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை 95% பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது என்று. உஜ்வால் யோஜனாவின் கீழ் 50 லட்சம் வீடுகள் புகையில்லா அடுக்களைகளைப் பெற்றுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தை நாம் வழிநடத்திச் செல்ல வேண்டுமானால் நமது பொருளாதாரம் சர்வதேச தரத்துக்கு உயர வேண்டும். கடந்த சில நாட்களாக சர்வதேச பொருளாதார தர நிறுவனங்கள் நமது கொள்கைகளை வரிசைப்படுத்தியிருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். ராமானுஜாச்சார்யா சொல்வார், "நாம் அனைவரையும் சரிசமமாக பார்க்க வேண்டும். யாரையும் தாழ்த்தக்கூடாது" என்று. இதையேதான் காந்தியும், அம்பேத்கரும் சொல்லியிருக்கின்றனர். சமூகத்தில் வேற்றுமை பாராட்டுதல் தலைதூக்கினால் அது இச்சமூகத்தை துண்டாடிவிடும். அப்படியே வேற்றுமைகள் தலை தூக்கினாலும் அவற்றை வேரறுக்க நாம் அதிக சக்தியோடு போராட வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு தேசத்துக்கு போதுமானதல்ல. சமூக சமத்துவமும் முக்கியம். சமூகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தீய சக்திகளை நாம் ஒன்றுபட்டு எதிர்ப்போம் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் தாமதிப்பதை இந்த அரசு விரும்புவதில்லை. எனவேதான் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நிறைவேற்றினோம். நேதாஜியின் ஆவணங்களை வெளிப்படுத்தினோம்" என உரையாற்றியுள்ளார்.