பரீட்சை எழுத போகும் மாணவர்கள் துணிவோடு பரீட்சைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படித்தவையே பரீட்சையில் வர போகிறது என்ற எண்ணத்துடன் மாணவர்கள் பரீட்சை எழுத செல்ல வேண்டும் என கொழும்பு றோயல் கல்லூரியின் ஆசிரியரும் தேசிய கல்வி நிறுவகத்தின் வளவாளருமான எஸ். ஆர். ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் விதிகள், கோட்பாடுகளை நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும். வேகமாக வாசித்து அறிந்து கொள்ளுதல் மற்றும் கணிதத்தில் சுருக்கலை வேகமாக செய்து பழகி கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Bsc , PGDE, PGDCT பட்டதாரியான ஜெயகுமார் கல்வியமைச்சிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.