ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் பலூன் மூலம் தனியாக உலகை சுற்றிவரும் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 65 வயதான பெடோர் கொனியுகோவ் எனும் இவர், இப் பயணத்தின்போது உறையவைக் கும் குளிர், உறக்கமின்மை போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.
அவரின் ஒட்சிசன் முக மூடிமீது ஐஸ் படியும் அளவுக்கு குளிரான சூழலில் இவர் பயணத்தை மேற்கொள்கிறார். எனினும், உலகை சுற்றிவரும் பயணத்தில் அரைப்பகுதியை பெடோர் கொனியுகோவ் கடந்துள்ளார் என அவரின் மகன் ஒஸ்கார் கொனியுகோவ் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் வட பகுதியிலிருந்து கடந்த 12 ஆம் திகதி இப் பயணத்தை பெடோர் கொனியுகோவ் ஆரம்பித்தார். 56 மீற்றர் (118 அடி) உயரமான இந்த பலூன் ஹீலியம் மற்றும் வெப்பவாயு மூலம் இயங்குகிறது. இந்த பலூனில் தொங்கும் 2 மீற்றர் (6 அடி, 7 அங்குலம்) நீளமும் 2 மீற்றர் உயரமும் 1.8 மீற்றர் (5 அடி 11 அங்குலம்) அகலமும் கொண்ட கார்பன் பெட்டியொன்றில் பெடோர் கொனியுகோவ் தங்கியுள்ளார்.
இப்பயணம் ஆரம்பமாகி 12 தினங்களில், அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் அவுஸ்திரேலியாவை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிட்டபடி இப்பயணம் நிறைவடைந்தால் ஒரு புதிய சாதனையாக அமையும். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட் 2002 ஆம் ஆண்டு 13 நாட்களில் பலூன் மூலம் உலகை சுற்றி வந்தமையே தற்போதைய சாதனையாகும்.