Thursday, September 29, 2016

How Lanka

எட்டு மாதங்களில் 270 லட்சம் ரூபாவை கொள்ளையிட்ட வீரவன்ச கோஷ்டி

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் கீழ் நடத்தப்பட்டு வந்த ஹொரணை கல்பாத்த கார்பட் தொழிற்சாலையின் பேரில் முன்னாள் பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச உட்பட அவரது நண்பர்கள் 270 லட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹொரணை கல்பாத்த கார்பட் தொழிற்சாலைக்கு என்று கூறி இந்த தொகைக்கான காசோலைகள் ஜயலத் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ருவான் ட்ரேட் சென்டர் ஆகிய நிறுவனங்களின் பெயர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கார்பட் தொழிற்சாலை 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2014ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 8 மாதங்கள் இயங்கியுள்ளது.

தொழிற்சாலையில், கார்பட் தயாரிக்கும் இயந்திரம், கல் அரைக்கும் இயந்திரம், இரண்டு டீசல் பவுசர்கள், 3 தார் பவுசர்கள், 1 வீல் லோடர், 2 ஜெனரேட்டர்கள் இருந்துள்ளன.

விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் 8 மாதங்களில் 270 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளதாக குற்றம் சுத்தமப்பட்டுள்ளது.