Thursday, September 29, 2016

How Lanka

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த புதிய ஒப்பந்தம்!

இலங்கையின் 100 கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைத்து, அவர்களுடன் ஒப்பந்த உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள இலங்கை கிரிக்கெட் கடடுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில்,

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஏ கிரிக்கெட் அணியின் 30 வீரர்களை பிரதான (மத்திய) ஒப்பந்தத்திற்கும்,

20 இளைய கிரிக்கெட் ( வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள்) வீர்ர்களை விளையாட்டு ஒப்பந்த்திலும்,

25 பிரபல கிரிக்கெட் வீரர்களை மற்றுமொரு ஒப்பந்தத்திலும் சேர்த்து,

மாகாண மற்றும் கழக மட்டத்திலான கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்ய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 உடன்படிக்கைகளில் கையெழுத்திடவுள்ளது.

கிரிக்கெட் வீரர்களையும் கிரிக்கெட் விளையாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான நிறைவேற்றுக்குழு இந்த தீரமானத்தை எடுத்துள்ளது.