Friday, November 25, 2016

How Lanka

டொனால்ட் டிரம்ப் அடுத்த கட்டம் 2024 ஒலிம்பிக் அமெரிக்காவில்

வாஷிங்டன்: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்தபடியாக வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பை எந்த நாட்டிடம் ஒப்படைப்பது? என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வரும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளது. இந்நிலையில், வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள 33-வது ஒலிம்பிக் போட்டியை அமெரிக்காவில் நடத்த அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, டொனால்ட் டிரம்ப்புடன் லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயர் எரிக் கார்செட்டி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப், இருவரும் நேரில் சந்தித்து பேசும்போது இதுபற்றி விரிவாக விவாதித்து முடிவு செய்வார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.