வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு, அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு, அதிபர் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். பின் ஹிலாரி தோல்வி குறித்து அவர் பேசியதாவது:
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். நாளை வெள்ளை மாளிகைக்கு வர அழைப்பு விடுத்துள்ளேன். தோல்வியடைந்த போதும் ஹிலாரி அமெரிக்க மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவார் என நம்புகிறேன். ஹிலாரியை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.