Sunday, November 6, 2016

How Lanka

Perpetual Treasuries நிறுவனம் தொடர்பான பல இரகசிய தகவல்கள் அம்பலம்

Perpetual Treasuries நிறுவனம் தொடர்பான பல இரகசிய தகவல்களை சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.


பல பில்லியன் ரூபா பெறுமதியான சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட்ட Perpetual Treasuries நிறுவனம் தொடர்பில் சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று சில இரகசிய தகவல்களை வெளியிட்டிருந்தது.

நிதிச்சந்தையில் அரச வங்கியின் தலையீடு தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருவதாக சந்தை தகவல்களை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவிக்க சந்தை தரப்பினர் அச்சம் அடைந்த்துள்ளதாக பெயர் குறிப்பிடாத மூலம் ஒன்றை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகை தனது பிஸ்னஸ் டைம்ஸ் பக்கத்தில் பிரசுரித்துள்ளது.

எனினும் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் ஒருவர், குறித்த வங்கியின் பொருளாலர் பிரிவில் தலைவராக மாற்றப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நபர் 2016 ஆம் ஆண்டு முதல் பகுதியில் இரண்டாவது முறிகள் விநியோக சம்பவம் பதிவான போது Perpetual Treasuries நிறுவனத்துடன் நெருங்கி உயர்மட்டத்தில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளதாக பிஸ்னஸ் டைம்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர் விடுமுறையில் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாக நம்புவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபரின் தலைமைத்துவத்தில் நடைபெறும் விசாரணைகளை விட முறிகள் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறித்த மூலத்தை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த கொடுக்கல் வாங்கல் ஒரு வலையமைப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இது குறித்து சட்ட ரீதியிலான கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.