Saturday, July 1, 2017

How Lanka

பொத்துவில், புத்தளத்தில் ராடர்களைப் பொருத்த ஜப்பான் 3,422 மில்லியன் ரூபா நிதியுதவி


இலங்கையில் காலநிலை பற்றிய தகவல்களை தரக்கூடிய ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கு, ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகநுமாவும், நிதியமைச்சின் செயலரும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்த உதவியின் கீழ் பொத்துவிலிலும், புத்தளத்திலும் இரண்டு ராடர் நிலையங்கள் அமைக்கப்படும்.
இங்கு டொப்ளர் ராடர்கள் பொருத்தப்பட்டு துல்லியமான காலநிலைத் தகவல்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்த ராடர் நிலையங்களுக்கும், வளிமண்டலவியல் திணைக்களத்துக்கும் தேவையான தொழில்நுட்ப உதவியும், ஜப்பானின் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.