வரட்சியால் குடி தண்ணீருக்குத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்று நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 23 வீதமாக குறைவடைந்துள்ளன என்று நீர்பாசனத் திணைக்களத்தின் நிர்வாக மற்றும் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
காலநிலையைக் கருத்தில் கொண்டு குடி தண்ணீரை விரயமாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று நீர்பாசனத் திணைக்களம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளை, புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் வரட்சியால் குடிநீருக்குப் பெரும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
8 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.