Saturday, July 1, 2017

How Lanka

வியப்பில் விஞ்ஞானிகள்! அமெரிக்காவின் ஒரெகன் (Oregon) மாநிலத்தில் ஸ்ரீ சக்கரம்


விஞ்ஞானிகளுக்கு இன்று வரை சரியான பதில் கூற முடியாத வகையிலான கேள்விகள் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன.

அவ்வாறான கேள்விகளில் ஒன்றே பயிர் வட்டங்கள். இந்தப் பயிர் வட்டங்கள் எனப்படுபவை நிலத்தில் மனிதனால் சாத்தியமற்ற வகையில் பிரமாண்டமான அளவில் உருவாக்கப்படுகின்றன.

குறிப்பாக ஒரே இரவில் நுட்பமான அதி உயர் தொழில் நுட்பம் கொண்டு அமைக்கப்படும் ஓர் வடிவம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது இவ்வாறான பயிர் வட்டங்களும், பூமியின் மேல் பிரமாண்டமான வகையில் வரையப்படும் ஓவியங்களும் ஓர் செய்தியினை உணர்த்துவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


மேலும், மதங்களுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கான ஆரம்பப் புள்ளி 1990 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ஶ்ரீ சக்கர வடிவம் ஆகும்.

அமெரிக்காவின் ஒரெகன் (Oregon) மாநிலத்தின் உள்ள மிக்கிபேசின் எனப்படும் பாலைவனப்பகுதியிலேயே இந்த வடிவம் கண்டு பிடிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு பில்மில்லர் என்கிற இராணுவ அதிகாரி இந்த இடத்தினை விமானம் மூலம் கடந்து செல்கையில் சுமார்13.3 மைல் சதுர பரப்பளவு கொண்ட வரைபடம் போன்ற வடிவத்தினை அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த வடிவம் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வடிவமானது இந்து மதத்தில் காலம் காலமாக வழிபட்டுவரும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஶ்ரீ சக்கர வடிவம் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அச்சு பிசகாமல் மிகச் சரியான அளவுகள் கொண்டு அந்த வடிவம் பாலைவன தரையில் வரையப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வடிவமானது தீடீரென பூமியில் தோன்றியது எவ்வாறு என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே இன்று வரை இருக்கின்றது.


மனிதர்களால் இது சாத்தியம் இல்லை என்பதனை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினாலும் எப்படி வரையப்பட்டது? யார் வரைந்தது என்பதும் வெளிப்படுத்தப்படவில்லை.

வரையப்பட்ட (உருவான) காலம் மிகத் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. மேலும் அதிக வெப்பம் கொண்ட தரையில் இந்த வடிவம் ஏன் வரையப்பட்டது?

இது குறித்து தொடர்ந்தும் ஆய்வு செய்தவர்கள் இன்றும் பூமியின் ஆங்காங்கே உருவாக்கப்படும் பயிர் வட்டங்களோடு இது தொடர்புபட்டது எனத் தெரிவித்தனர்.
அதேபோல வானத்தில் இருந்து பார்க்கும் போது மட்டுமே இந்த வடிவம் தெளிவாகத் தெரியும் என்பதனால் இது வானில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படும் அடையாளம் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறான வடிவங்கள் மூலமாக பூமிக்கு அல்லது பூமியை அவதானிப்பவர்களுக்கு செய்தி பரிமாற்றப்படுகின்றது எனவும் விஞ்ஞானிகள் தற்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் வேற்றுக்கிரகங்களுடன் தொடர்புபட்டவர்கள் பூமிக்கு கூறும் செய்தியாக இருக்க வேண்டும் என்ற கோணத்திலும் ஆய்வாளர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கணிதத்துடன் தொடர்புபட்ட இவை கூறும் செய்தியினை தெளிவாக ஆய்வு செய்யும் போது மதங்கள் பற்றியும் கடவுள் குறித்தும் தெளிவுகள் பிறக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.