Wednesday, July 5, 2017

How Lanka

கோரிக்கை கட்டாரால் நிராகரிப்பு - அதிருப்தியில் வளைகுடா நாடுகள்! பல தடைகளுக்கு வாய்ப்பு

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீவிரம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கட்டாருக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளால் விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை கட்டார் அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்நிலையில் நெருக்கடி நிலை தீவிரம் பெற்றுள்ளது.

சமகாலத்தில் எழுந்துள்ள பிரச்சினைனை முடிவுக்கு கொண்டு வர சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் நேற்று கெய்ரோவில் ஒன்று கூடிய கலந்தாலோசித்தன.


இதன்போது கோரிக்கையை ஏற்க மறுத்த கட்டார் மீதான மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

கட்டார் விவகாரம் குறித்து நான்கு அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்தாலோசித்த போது, தங்களின் நிபந்தனைகளுக்கு கட்டார் அளித்த "எதிர்மறையான" பதில் வருத்தமளிப்பதாக தெரிவித்தனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் தீவிரத்தையும் ஆழத்தையும் கட்டார் புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். சவூ அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் கடந்த மாதம் கட்டார் உடனான உறவுகளை துண்டித்து விட்டன. பயங்கரவாத குழுக்களுக்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டிய இந்த நாடுகள், கட்டார் கொள்கைகளில் பெரும் மாற்றங்களைக் கோரியிருந்தன. அல்ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக் கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த நிபந்தனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவற்றை நிறைவேற்றுவதற்கு கட்டாருக்கு 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், மேலும் 48 மணி நேரம் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் தமது உள் விவகாரங்களில் தலையீடுகள் மேற்கொள்வதாக கட்டார் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வளைகுடா நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு இணங்க கட்டார் மறுத்தால் அதன் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்றும் கட்டார் அரசாங்க ஆதரவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்திலிருந்தும் கட்டார் வெளியேற்றப்படும் சாத்தியம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.