Thursday, September 28, 2017

How Lanka

என்னையா நடக்குது இந்த நாட்டில 3 வருசத்துக்கு பிறகு சம்பளமா


வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான நிலுவைச்சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

நிலுவைச்சம்பளம் கிடைக்காமைக்கு எதிராக தொழிலாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, கடதாசி தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கான ஒரு மாத நிலுவைச் சம்பள காசோலையை நீதிமன்றத்தில் கையளித்துள்ளனர்.

43, 52, 986 ரூபா 61 சதத்திற்கான காசோலையை வாழைச்சேனை கடதாசி ஆலையின் கணக்காளர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்தப் பணம் 222 தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

2014 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து தொழிற்திணைக்களத்தினூடாக தொழிலாளர்களால் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இன்றைய வழக்கு விசாரணையை அடுத்து, ஏப்ரல் மாதற்திற்கான நிலுவைச்சம்பளத்தை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.