வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குக்குலே கங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதால், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், களுகங்கையின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.